×

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி..!

அகமதாபாத்: டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 3வது முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இந்நிலையில் இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 89 ரன்களும், அபிஷேக் சர்மா 52 ரன்களும், இஷான்கிஷன் 54 ரன்களும், அக்சர் படேல் 3 விக்கெட்டுகளும், ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.

Tags : T20 World Cup ,New Zealand ,Ahmedabad ,
× RELATED சாம்சனின் பேட்டில் தகர்ந்த சாதனைகள்