பெர்த்: இந்தியா – ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் இடையே ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெர்த்தில் துவங்கி நடந்து வருகிறது. முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய பவுலர்களின் அட்டாக்கால் 198 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அடுத்து ஆட துவங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் எடுத்திருந்தது. நேற்று 2ம் நாள் ஆட்டத்தை துவக்கிய ஆஸ்திரேலிய அணியின் அனபல் சுதர்லாந்து சதமும், எலிசா பெர்ரி அரை சதமும் அடித்து அசத்தினர்.
தொடர்ந்து சுதர்லாந்து 129 ரன்னிலும், பெர்ரி 76 ரன்னிலும் அவுட் ஆக மற்றவர்கள் சொற்ப ரன்னில் நடையை கட்ட ஆஸ்திரேலிய அணி 323 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அடுத்து 2வது இன்னிங்சை துவக்கிய இந்திய அணி மீண்டும் சொதப்பல் ஆட்டத்தை தொடர்ந்தது. பிரதிகா ராவல் 43 ரன்களுடன் களத்தில் நிற்க மற்றவர்கள் சொற்ப ரன்களிலே அவுட் ஆகி வெளியேறினர். இதனால் 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் எடுத்தது. 3வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.
