×

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: 2-வது இன்னின்ஸ் 5 ஓவர்களில் நியூசிலாந்து அணி 47-3 ரன்கள் எடுத்துள்ளது

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: இந்திய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அகமதாபாத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் சான்ட்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார். கடந்த 3 ஆண்டுகளில் ஐசிசி போட்டி இறுதி ஆட்டத்தில் 3வது முறையாக இந்தியா – நியூசிலாந்து மோதுகின்றன.

முதல் 5 ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இலப்பின்றி 72 ரன்கள் எடுத்துள்ளது. சஞ்சு சாம்சன் 17 பந்துகள் விளையாடி 33 ரன்களும், அபிஷேக் ஷர்மா 13 பந்துகள் விளையாடி 31 ரன்களும் எடுத்துள்ளனர்.

தொடர்ந்து 7.1 வது ஓவரில் அபிஷேக் ஷர்மா 21 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த நிலையில் இசான் கிசான் களத்தில் இறங்கினார். தொடர்ந்து சஞ்சு சாம்சன் 10.6 வது ஓவரில் 33 பந்துகளில் 50 ரன்கள் குவித்தார். இந்த நிலையில் இந்திய அணி 13 ஓவர் முடிவில், 1 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் குவித்துள்ளது.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்து அணிக்கு 256 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்திய அணி. அகமதாபாத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் குவித்தது.

இந்திய அணியில் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 89, அபிஷேக் சர்மா 52, இஷான் கிஷன் 54 ரன்கள் குவித்தனர். நியிசிலாந்து அணி ஜேம்ஸ் நீஷம் 3, மேட் ஹென்றி, ரச்சின் ரவீந்திரா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

Tags : T20 World Cup Finals ,New Zealand ,AHMEDABAD ,ICC ,
× RELATED உணவு உற்பத்திக்கும் பாதிப்பை...