×

பிரிமியர் லீக் கால்பந்து கிரிஸ்டல் பேலஸ் ஆதிக்கம்: 3 கோல் போட்டு அசத்தல் வெற்றி

லண்டன்: பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் நேற்று, கிரிஸ்டல் பேலஸ் அணி, 3-1 என்ற கோல் கணக்கில் டாட்டன்ஹாம் அணியை அபாரமாக வென்றது. பிரீமியர் லீக் கால்பந்து போட்டிகள் லண்டனில் நடந்து வருகின்றன. நேற்று நடந்த போட்டியில் கிரிஸ்டல் பேலஸ் அணியும், டாட்டன்ஹாம் அணியும் மோதின. போட்டியின் துவக்கம் முதல் கிரிஸ்டல் பேலஸ் அணி வீரர்கள் அட்டகாச ஆட்டத்தை வெளிப்படுத்தி பந்தை பெரும்பாலான நேரம் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

இருப்பினும் போட்டியின் முதல் கோலை, டாட்டன்ஹாம் வீரர் டொம்னிக் சொலான்கே, 34வது நிமிடத்தில் போட்டார்.  அதன் பின் சுதாரித்து ஆடிய கிரிஸ்டல் அணியின் இஸ்மாய்லா சார், 40வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை சிறப்பாக ஆடி கோலாக்கினார். முதல் பாதி ஆட்ட நேர முடிவில் கிடைத்த ஸ்டாப்பேஜ் நேரத்தில் கிரிஸ்டல் அணியின் ஜோர்கென் ஸ்டிராண்ட் லார்சன் ஒரு கோலும், இஸ்மாய்லா சார் 45+7வது நிமிடத்தில் மேலும் ஒரு கோலும் அடித்தனர்.

அதன் பின் இரு அணி வீரர்களாலும் கோல் போட முடியவில்லை. அதனால், 3-1 என்ற கோல் கணக்கில் கிரிஸ்டல் பேலஸ் அணி அபார வெற்றி பெற்றது. போட்டியின் 38வது நிமிடத்தில் டாட்டன்ஹாம் அணி வீரர் மிக்கி வான் டி வென், முரட்டுத்தனமாக ஆடியதால், நடுவரால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு களத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். கிரிஸ்டல் பேலஸ் அணி, 29 போட்டிகளில் 10ல் வென்று, 38 புள்ளிகளுடன் 13வது இடத்தில் உள்ளது. டாட்டன்ஹாம் அணி, 29ல் 7ல் வெற்றி பெற்று, 29 புள்ளிகளுடன் 16வது இடத்தை பிடித்துள்ளது.

Tags : Premier League Football ,Crystal Palace ,London ,Tottenham ,Premier League ,
× RELATED இங்கிலாந்தை வீழ்த்தி 4வது முறையாக...