கோவில்பட்டியில் மாநில வில்வித்தை போட்டி சென்னை அணி முதலிடம்

கோவில்பட்டி: கோவில்பட்டியில் நடந்த மாநில அளவிலான வில்வித்தை போட்டியில் சென்னை அணியினர் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றனர்.  கோவில்பட்டியில் மாநில அளவிலான வில்வித்தை போட்டி ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. தொழிலதிபர் விநாயகா ரமேஷ் தலைமை வகித்து, போட்டிகளை தொடங்கி வைத்தார். பள்ளித்தலைவர் வெங்கடகிருஷ்ணன், தொழிலதிபர் கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டியில் தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, சென்னை, காஞ்சிபுரம், நாமக்கல் உள்ளிட்ட 20  மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 300பேர் கலந்து கொண்டனர். போட்டிகள் இந்தியன் போ, ரீகோ போ, காமன் போ என்று 3  பிரிவுகளில் 10, 14, 17, 19 வயதுக்குட்பட்டோர், மூத்தோர், வெற்றன் எனப் பல்வேறு கட்டங்களாக நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு எஸ்.பி. ஜெயக்குமார் பரிசுகள் வழங்கி பாராட்டிப் பேசினார். நிகழ்ச்சியில், கோவில்பட்டி டிஎஸ்பி கலைகதிரவன், டாக்டர் பிரபு, சைலஜா உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் முதலிடத்தை சென்னை லவ்லி அகாடமி அணியினரும், 2வது இடத்தை நாமக்கல் செவன் ஸ்டார் வில்வித்தை அகாடமியினரும், 3ம் இடத்தை விருதுநகர் டிராகன் வில்வித்தை அகாடமி அணியினரும் பெற்றனர்.

Related Stories: