×

ஊரக பகுதிகளில் இளைஞர்கள், பெண்களுக்கு அதிகளவில் திறன் பயிற்சி வழங்க நடவடிக்கை

*ஆட்சியர் தகவல்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மகளிர் திட்டத்தின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து ஆய்வு செய்து இத்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு சமைக்கும் பொருட்கள் தரமானதாகவும், சமையலறை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருப்பதை உறுதி செய்யவும், மேலும் உணவின் தரம் குறித்தும் ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் இதுகுறித்து வட்டாரந்தோறும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வட்டார அளவில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் மகளிர் சுய உதவிக்குழுக்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்து மகளிர் குழு மற்றும் சிறப்பு குழுக்கள் அமைத்தல், மகளிர் திட்டத்தில் பணிபுரியும் வட்டார மேலாளர்கள் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், அனைத்து வட்டாரங்கள் மற்றும் ஊராட்சிகளில் புதிய மகளிர் குழுக்களை அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று மலைவாழ் மக்கள் அனைவரையும் இக்குழுவில் இணைத்து செயல்பட தேவையான நடவடிக்கை மேற்கொள்ளவும், குழுவில் சேரும் உறுப்பினர்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்புகள், நகர்ப்புற, ஊரக வங்கிகளில் பெற்று வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் ஊரக பகுதிகளில் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு அதிகளவில் திறன் பயிற்சி வழங்குவது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு தேவையான நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் மகளிர் திட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Kallakurichi ,Kalalakurichi District Governor's Office Partnership ,Project ,District ,Governor ,Prashant ,
× RELATED 5 பஸ்கள் 66 முறை இயக்கப்படுகின்றன ஓவேலி...