×

பு.பாலத்தொழுவு கிராம மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம்

ஈரோடு : சென்னிமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட புஞ்சை பாலத்தொழுவு ஊராட்சி ஓலப்பாளையத்தில் உள்ள 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்கதொட்டியில், ஐஓடி அடிப்படையிலான ஸ்மார்ட் குடிநீர் மேலாண்மை மற்றும் தானியங்கி குளோரினேஷன் அமைப்பு செவர்ன் க்ளோகான் வால்வ்ஸ் நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதி மூலம் செயல்படுத்தப்பட்டது.

இது ஐஐடி சென்னை நிறுவனத்தின் அக்வாமேப் திட்டத்தின் கீழ் அமல்படுத்தப்பட்டு, தொழில்நுட்ப செயல்பாட்டை ரியல்டெக் ஜிபிஎஸ் நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதுகாப்பான மற்றும் சீரான குடிநீர் விநியோகம் என்பன உறுதி செய்யப்படுகிறது.

இந்நிலையில், ஓலப்பாளையம் அரசு பள்ளியில்,குடிநீர் தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்கும், ஊராட்சியிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் அக்வாமேப் பிரிவு பேராசிரியர் டாக்டர் மூர்த்தி வரவேற்றார். முதன்மை ஆய்வாளர் பேராசிரியர் லிஜிபிலிப் திட்டத்தின் நோக்கம் குறித்து பேசினார். ரியல்டெக் ஜிபிஎஸ் நிறுவனத்தின் நிறுவனர் குமார் திட்ட செயல்பாடுகள் விளக்கம் அளித்து பேசினார்.

செவர்ன் க்ளோகான் வால்வ்ஸ் நிறுவன மூத்த துணைத்தலைவர் மகேந்திரன் செல்வராஜ் பங்கேற்று நீர் மேலாண்மைக்கான நிறுவனத்தின் உறுதிப்பாட்டை வலியுறுத்தி பேசினார். நிகழ்ச்சியில் மனித வளத்துறை வித்யா, இயக்குநர் ராஜ்குமார், நிதித்துறை சிவகுமார், அக்வாமேப் பேராசிரியர்கள் தர்குமார், சீனிவாசன், திட்ட ஆலோசகர்கள் நடனசபாபதி, குமரன், கவுதம், ஸ்வாலி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags : Pu. Palathozhvu ,Erode ,Olapalayam, ,Punjai Palathozhvu ,Chennimalai ,Severn Clogon Valves ,
× RELATED நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதியில்...