- ஸ்டாலின்
- கந்தர்வகோட்டை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தமிழ்நாடு இராணுவம்
- கந்தர்வகோட்டை,
- எம்எல்ஏ கே.
- புதுக்கோட்டை மாவட்டம்
- தெற்கு யூனியன்
- கோவிலூர் பகுதி நகரம்
- ராஜா
*அரசு திட்டங்களை எடுத்துக்கூறினர்
கந்தர்வகோட்டை : கந்தர்வகோட்டை நகரில் வெல்லும் தமிழ்ப்பெண்கள் படையினர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சாதனைகளை எடுத்துக்கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தெற்கு ஒன்றியம் கந்தர்வகோட்டை , கோவிலூர் பகுதியில் நகர செயலாளர் ராஜா முன்னிலையில், வடக்கு மாவட்ட செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் வழிகாட்டுதல்படி,
ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்பதை முன்வைத்து வெல்லும் தமிழ்ப்பெண்கள் அமைப்பினர் அனைவருடைய வீடுகளுக்கு நேரில் சென்று பெண்களின் வளர்ச்சிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்த கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம், விடியல் பயணம் திட்டம், புதுமைப்பெண் திட்டம், முதலமைச்சரின் காலை உணவு திட்டம், தாயுமானவர் திட்டம், தோழி விடுதித்திட்டம், முதியோர் உதவித்தொகை திட்டம், நான் முதல்வன் திட்டம், உங்களுடன் ஸ்டாலின் திட்டம்,
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் போன்ற என்னற்ற திட்டங்கள எடுத்து கூறி மேலும் உங்களுக்கு என்ன தேவை அதை எங்களிடம் கூறுங்கள் நாங்கள் ஒன்றிய செயலாளர்,
நகர செயலாளர் மூலம் தலைமைக்கு எடுத்து கூறி உங்கள் தேவைகள உடனுக்குடன் செய்ய முயற்சிக்கிறோம் என கூறி ஆதரவு திரட்டினர்.
மேலும் மகளிர் உரிமை தொகை 5 ஆயிரம் வழங்கியதையும் கூறியும், மாற்றுதிறனாளிகளுக்கும், கைம்பெண் இருக்கும்,முதியோர் களுக்கும் மாதந்திர உதவிதொகையுடன் கூடுதலாக இரண்டு ஆயிரம் வழங்கியதை கூறி இனிவரும் காலங்களில் கூடுதல் தொகை கிடைக்கும் என தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் முன்னால் ஒன்றிய கவுன்சிலர் ராஜேந்திரன், மாவட்ட மீனவர் அணி துணை செயலாளர் ஜானகிராமன், சிறுபான்மை பிரிவு ரசூல், முரளி, மணிவண்டையார், கணேசன்,மகளிர் அணி லெஷ்மி, நாக லெஷ்மி, மஞ்சுளா,மற்றும் அனைந்து கட்சி பிரிவினர்கள் கலந்துகொண்டனர்.
