3 நாள் தொடர் சரிவுக்கு பின் இந்திய பங்குச் சந்தை 1% வரை உயர்ந்தது

மும்பை: 3 நாள் தொடர் சரிவுக்கு பின், பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டியதால் பங்குச் சந்தை 1% வரை உயர்ந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 900 புள்ளிகள் அதிகரித்து 80,016 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 19 நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரித்துள்ளது. அதானி போர்ட்ஸ் 4.5%, எல்&டி பங்கு3.8%, என்.டி.பி.சி., ரிலையன்ஸ், பிஇஎல், இண்டிகோ பங்கு தலா 3% விலை உயர்ந்தது. தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 285 புள்ளிகள் உயர்ந்து 24,766 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

Related Stories: