×

காருடன் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம்: முதல்வர் உத்தரவு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், ஆலம்பூண்டி கிராமத்தில் நேற்று முன்தினம் காலை சுமார் 08.30 மணியளவில் புதுவை – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து நெடுஞ்சாலை அருகிலுள்ள தனியாருக்கு சொந்தமான கிணற்றில் விழுந்து மூழ்கியது. இதில் காரில் பயணம் செய்த சென்னை, கெருகம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜா (44), வினோத் (39), கொளப்பாக்கம் காந்தி தெருவை சேர்ந்த ஜெயமுருகன் (43), மௌலிவாக்கம், பொன்னியம்மன் கோயில் தெருவை சேர்ந்த சேகர் (27) ஆகிய நான்கு நபர்கள் கிணற்று நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியை கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இந்த விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.3 லட்சம் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Chief Minister ,Chennai ,M.K. Stalin ,Puducherry-Krishnagiri National Highway ,Alampoondi ,Senchi taluk, Villupuram district ,
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...