×

ஹோலியின் வண்ணங்கள் அனைவரது வாழ்வையும் மகிழ்ச்சியால் நிரப்பட்டும்: ராகுல் காந்தி வாழ்த்து

புதுடெல்லி: “ஹோலியின் வண்ணங்கள் அனைவரது வாழ்வையும் மகிழ்ச்சியால் நிரப்பட்டும்” என ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி நேற்று டெல்லி அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் தொண்டர்களுடன் ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார். அப்போது காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் ராகுல் காந்தி மீது வண்ணங்களை பூசி மகிழ்ந்து, வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர். ராகுல் காந்தியும் அனைவர் மீதும் வண்ணங்களை பூசி, மலர்களை தூவி வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

பின்னர் ஹோலி கொண்டாட்ட புகைப்படங்களை தன் எக்ஸ் பதிவில் பகிர்ந்து கொண்ட ராகுல் காந்தி, “வண்ணங்கள் மற்றும் அன்பின் பண்டிகையான ஹோலியில் உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். ஹோலியின் வண்ணங்கள் உங்கள் வாழ்வில் புதிய நம்பிக்கைகள், புதிய உற்சாகம் மற்றும் அளவற்ற மகிழ்ச்சியை நிரப்பட்டும்” என வாழ்த்து கூறி உள்ளார். காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தன் எக்ஸ் பதிவில், “தூரங்களை இணைக்கும் இந்த மகிழ்ச்சியான தருணத்தில் அனைவருக்கும் ஹோலி வாழ்த்துகள். உங்கள் வாழ்க்கை எப்போதும மகிழ்ச்சியின் வண்ணங்களால் நிறைந்திருக்கட்டும். ஹோலி என்பது நமது வண்ணமயமான, பன்முக கலாச்சார சமூகத்தின் ஆன்மாவை வௌிப்படுத்தும் பண்டிகை. இது வேற்றுமையில் ஒற்றுமை, பரஸ்பர நல்லிணக்கம், சகோதரத்துவத்தின் பாரம்பரியத்தை கொண்டாடுகிறது” என தெரிவித்துள்ளார்.

Tags : Holi ,Rahul Gandhi ,New Delhi ,Lok Sabha ,Congress ,Akbar Road ,Delhi ,
× RELATED மீண்டும் பதவி ஏற்ற 3 மாதத்தில் திடீர்...