கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆர் பணிகளுக்கு பிறகு இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர். மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் கடந்த சில மாதங்களாக மேற்கொள்ளப்பட்டது. கடந்த 28ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், 6 கோடியே 44 லட்சம் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில், 63 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தை சேர்ந்த ரபீக் அலி காஸி(44) மற்றும் ஜல்பைகுரியை சேர்ந்த மோமோ விற்பனையாளர் கவுரங் டே(62) ஆகியோர் நேற்றுமுன்தினம் தற்கொலை செய்து கொண்டனர்.
