×

இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் விதமாக பின்லாந்து அதிபர் ஸ்டப் இந்தியா வருகை

புதுடெல்லி: பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப் நேற்று இந்தியா வந்தார். பின்லாந்து அதிபர் டாக்டர் அலெக்சாண்டர் ஸ்டாப் நான்கு நாள் அரசு முறை பயணமாக நேற்று இந்தியா வந்தார். டெல்லி விமான நிலையத்தை வந்தடைந்த அவருக்கு வௌியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பிரதமர் அலுவலகத்துக்கு வந்த ஸ்டப்பை பிரதமர் மோடி வரவேற்றார். இதுகுறித்து பிரதமர் மோடி தன் எக்ஸ் பதிவில், “இந்தியா பின்லாந்து இடையேயான இருதரப்பு உறவுகளை அந்நாட்டு அதிபரின் இந்திய பயணம் மேலும் வலுவடைய செய்யும்” என குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப் தன் எக்ஸ் பதிவில், “இந்திய பயணத்தின்போது குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி மற்றும் பல்வேறு தலைவர்களை சந்தித்து பேச உள்ளேன். இந்த பயணம் இருநாடுகளுக்கிடையே வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும்” என தெரிவித்துள்ளார். ஸ்டப்பின் பதிவுக்கு பதிலளிக்கும் விதமாக பிரதமர் மோடி தன் எக்ஸ் தளத்தில், “தங்களது கருத்துகளுடன் நான் முழுமையாக உடன்படுகிறேன். தங்களின் இந்திய பயணம் இருநாடுகளிடையேயான உறவை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்லும்” என பதிவிட்டுள்ளார். டெல்லியில் இன்று நடைபெறவுள்ள 11வது ரெய்சினா உரையாடல் 2026ல் பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப் தலைமை விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளார்.

Tags : President Stubbs ,India ,New Delhi ,President Alexander Stubbs ,President ,Dr. ,Alexander Stubbs ,Delhi airport ,Minister of State for External Affairs ,Kirti Vardhan… ,
× RELATED மீண்டும் பதவி ஏற்ற 3 மாதத்தில் திடீர்...