×

திருக்குவளையில் புதிய வட்டாட்சியர் பொறுப்பேற்பு

கீழ்வேளூர், மார்ச் 4: திருக்குவளை தாலுகா அலுவலகத்தில் புதிய வட்டாட்சியராக உதயகுமார் பொறுப்பேற்றக் கொண்டார். நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை தாலுகா அலுவலகத்தில் வட்டாட்சியராக பணிபுரிந்த கிரிஜாதேவி பணி மாறுதலில் நாகப்பட்டினம் மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராக மாறுதல் பெற்றதை தொடர்ந்து டாஸ்மார்க் கிடங்கு மேலாளராக இருந்த உதயகுமார் திருக்குவளை புதிய வட்டாட்சியராக நியமிக்கப்ப ட்டார். அதையடுத்து அவர் நேற்று தாசில்தாராக பொறுப்பேற்றுக்கொண்டார். புதிய தாசி ல்தாராக பொறுப்பேற்ற உதயகுமாருக்கு அலுவலக பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

 

Tags : Kielvelur ,Udayakumar ,Tirukuwa ,Taluga ,Girizadevi ,District ,Nagapattinam District Taluga Office ,
× RELATED சாத்தூர் அருகே மக்கள் அரங்கம்...