×

ஏர்வாடியில் எஸ்டிபிஐ மகளிர் அணி சார்பில் மத நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி

ஏர்வாடி, மார்ச் 4: ஏர்வாடியில் எஸ்டிபிஐ கட்சியின் மகளிர் அணி சார்பில் மத நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மகளிர் அணி நகர கமிட்டி தலைவர் ஹமீத் அக்பர் தலைமை வகித்தார். ஏர்வாடி மகளிர் அணி பொருளாளர் பாத்திமா ஹாலிக் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்டத் துணைத் தலைவர் சுலைமான், நாங்குநேரி தொகுதி தலைவர் பஷீர் அகமது, மகளிர் அணி மாவட்ட துணை தலைவர் பீர் பாத்து, எஸ்டிபி ஐடி விங் மாவட்ட தலைவர் அகமது பாத்திமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை புறநகர் மாவட்ட பொதுச் செயலாளர் மீராசா, ஏர்வாடி பேரூராட்சி மன்ற தலைவர் தஸ்லிமா அயுப்கான், திமுக நகர செயலாளர் அயுப்கான், கவுன்சிலர்கள் ஜன்னத் ஆலிமா, இசக்கியம்மாள், செய்யது அலி பாத்திமா, ஹலீமா, தஸ்லிமா, சரண்யா, எஸ்டிபிஐ நாங்குநேரி தொகுதி தலைவர் ஜன்னத்துல் பிர்தௌஸ், தலைமை ஆசிரியை ஜெசிமீரா, ராணி மெட்ரிக் பள்ளி தாளாளர் ராணி ஜெயசெல்வி, டிவிஎஸ் அறக்கட்டளை ஷாலினி, ஐடா உள்பட பலர் கலந்து கொண்டனர். அணி செயற்குழு உறுப்பினர் ரஹ்மான் பீவி நன்றி கூறினார்.

Tags : Iftar ,STBI Women's Wing ,Airwadi ,Women's Wing City Committee ,President ,Hamid Akbar ,Airwadi Women's Wing ,Treasurer ,Fatima Halik… ,
× RELATED மாசி மகத்தை முன்னிட்டு மெரினா...