தூத்துக்குடி, மார்ச் 4: தூத்துக்குடி அருகே உள்ள புதூர் பாண்டியாபுரத்தில் பொன்செல்வம் என்பவரது வீட்டு சமையலறையில் 6 அடி நீளமுள்ள சாரை பாம்பு புகுந்தது. இதைக் கண்ட வீட்டில் இருந்தவர்கள் பதறியபடி வெளியே வந்து சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து பொன்செல்வம் வீட்டின் சமையலறையில் பதுங்கியிருந்த சாரைப் பாம்பை லாவகமாக பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். இதனால் வீட்டில் இருந்தவர்கள் நிம்மதியடைந்து தீயணைப்பு வீரர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
