தூத்துக்குடி, மார்ச் 4: தூத்துக்குடி அண்ணா நகர் 4வது தெருவை சேர்ந்தவர் துரைராஜ் மகன் சாமுவேல் (25). எலக்ட்ரீஷியனாக வேலை செய்து வந்தார். இவரது வீட்டில் திடீரென மின் தடை ஏற்பட்டுள்ளது. இதனை அவர் பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். தகவலறிந்த தென்பாகம் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
