×

புதிய உழவர் சந்தை அமைக்க எம்எல்ஏ ஆய்வு

நல்லம்பள்ளி, மார்ச் 4: நல்லம்பள்ளியில், 40 சென்ட் பரப்பில் புதிய உழவர் சந்தை அமைக்க எம்எல்ஏ ஆய்வு செய்தார். தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பஸ் ஸ்டாண்டையொட்டி, சுமார் 40 சென்ட் பரப்பளவில் புதிய உழவர் சந்தை அமைக்கப்பட உள்ளது. அங்குள்ள பழுதடைந்துள்ள பழைய வேளாண் கட்டிடங்களை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் புதிய உழவர் சந்தை அமைக்கப்பட உள்ளது. இந்த இடத்தை தர்மபுரி வெங்கடேஸ்வரன் எம்எல்ஏ., நேற்று அதிகாரிகளுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது இடத்தின் பரப்பு, சுகாதார வசதி உள்ளிட்டவைகளை அவர் பார்வையிட்டார். ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர் கோவிந்தசாமி, வேளாண் உதவி அலுவலர் சங்கர், ஊராட்சி செயலர் செல்வம், பாமக நிர்வாகிகள் சண்முகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags : MLA ,Nallampally ,Dharmapuri district ,
× RELATED மாசி மகத்தை முன்னிட்டு மெரினா...