×

கலப்பட டீ தூள் பதுக்கிய 3 கடைகளுக்கு அபராதம்

நல்லம்பள்ளி, மார்ச் 4: தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் இண்டூர் ஊராட்சிக்குட்பட்ட சோம்பட்டி பகுதியில் உள்ள டீக்கடைகளில் கலப்பட டீ தூள் பதுக்கி வைத்து பயன்படுத்துவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சரண்குமார் மற்றும் இளநிலை உணவு பகுப்பாய்வாளர் கார்த்திக் ஆகியோர் அப்பகுதியில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர். மளிகை கடை, டீக்கடை மற்றும் பேக்கரி கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அங்குள்ள 3 டீக்கடைகளில் கலப்பட டீ தூள் பயன்படுத்துவது கண்டறியப்பட்டது. இதையடுத்து, 3 கடைகளுக்கு தலா ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இதுபோன்ற கலப்பட டீ தூளை பயன்படுத்துவோருக்கு உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் சட்டம் 2006ன் படி கடுமையான தண்டனை வழங்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Tags : Nallampalli ,Food Safety Department ,Sompatty ,Dharmapuri District ,Nallamalli Union Intur Uratchi ,Department of Food Safety ,
× RELATED மாசி மகத்தை முன்னிட்டு மெரினா...