×

மே.வங்கத்தில் பாஜ ஆட்சிக்கு வந்தால் குற்றவாளிகள் ஒரு மாதத்துக்குள் சிறையில் அடைக்கப்படுவார்கள்: ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு

ஹவுரா: மேற்குவங்கத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஹவுரா மாவட்டத்தில் உள்ள அம்தா என்ற இடத்தில் பரிவர்த்தன் யாத்ரா என்ற பேரணி நடைபெற்றது.

இதில் ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்பேசுகையில், “கடந்த 2011ம் ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி அமைத்த பிறகு 7,000 நிறுவனங்கள் மாநிலத்தை விட்டு வௌியேறின. ஒருபுறம் தொழிற்சாலைகளும், இளைஞர்களும் பசுமையான மேய்ச்சல் நிலங்களை தேடி மாநிலத்தை விட்டு வௌியேறும்போது, இங்கு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசு சட்டவிரோதமாக குடியேறியவர்களை வௌிப்படையாக அழைக்கிறது. வரும் பேரவை தேர்தலில் பாஜ ஆட்சிக்கு வந்தால் ஊடுருவல் தடுக்கப்படும். மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வௌியேற்றுவோம். குற்றவாளிகள் ஒரு மாதத்துக்குள் சிறையில் அடைக்கப்படுவார்கள்.

மாநிலத்தில் இனி திரிணாமுல் காங்கிரசின் அட்டூழியங்கள் தொடர கூடாது என மாநில மக்கள் முடிவு செய்துள்ளனர். மேற்குவங்கத்தில் மாற்றத்துக்கான நேரம் வந்து விட்டது. வாக்களிக்கும்போது மக்கள் யாரும் தடுமாற வேண்டாம்” என இவ்வாறு தெரிவித்தார்.
அசாம் மாதிரி பின்பற்றப்படும்: பாஜ தேசிய தலைவர் நிதின் நபின் பேசுகையில், “மேற்குவங்கத்தில் பாஜ ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தில் உள்ள ஊடுருவல்காரர்களை வௌியேற்ற அசாம் மாநிலத்தின் கண்டறிதல், நீக்குதல் மற்றும் நாடு கடத்துதல் என்ற மாதிரியை பாஜ பின்பற்றும்.

மாநிலத்தில் 50 லட்சத்துக்கும் அதிகமான வங்கதேச ஊடுருவல்காரர்களின் உரிமையை தேர்தல் ஆணையம் எஸ்ஐஆர் மூலம் பறித்துள்ளது ” என தெரிவித்தார்.ஹவுரா, மார்ச் 3: மேற்குவங்கத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஹவுரா மாவட்டத்தில் உள்ள அம்தா என்ற இடத்தில் பரிவர்த்தன் யாத்ரா என்ற பேரணி நடைபெற்றது.

இதில் ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்பேசுகையில், “கடந்த 2011ம் ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி அமைத்த பிறகு 7,000 நிறுவனங்கள் மாநிலத்தை விட்டு வௌியேறின. ஒருபுறம் தொழிற்சாலைகளும், இளைஞர்களும் பசுமையான மேய்ச்சல் நிலங்களை தேடி மாநிலத்தை விட்டு வௌியேறும்போது, இங்கு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசு சட்டவிரோதமாக குடியேறியவர்களை வௌிப்படையாக அழைக்கிறது. வரும் பேரவை தேர்தலில் பாஜ ஆட்சிக்கு வந்தால் ஊடுருவல் தடுக்கப்படும். மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வௌியேற்றுவோம். குற்றவாளிகள் ஒரு மாதத்துக்குள் சிறையில் அடைக்கப்படுவார்கள்.

மாநிலத்தில் இனி திரிணாமுல் காங்கிரசின் அட்டூழியங்கள் தொடர கூடாது என மாநில மக்கள் முடிவு செய்துள்ளனர். மேற்குவங்கத்தில் மாற்றத்துக்கான நேரம் வந்து விட்டது. வாக்களிக்கும்போது மக்கள் யாரும் தடுமாற வேண்டாம்” என இவ்வாறு தெரிவித்தார்.

அசாம் மாதிரி பின்பற்றப்படும்: பாஜ தேசிய தலைவர் நிதின் நபின் பேசுகையில், “மேற்குவங்கத்தில் பாஜ ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தில் உள்ள ஊடுருவல்காரர்களை வௌியேற்ற அசாம் மாநிலத்தின் கண்டறிதல், நீக்குதல் மற்றும் நாடு கடத்துதல் என்ற மாதிரியை பாஜ பின்பற்றும்.

மாநிலத்தில் 50 லட்சத்துக்கும் அதிகமான வங்கதேச ஊடுருவல்காரர்களின் உரிமையை தேர்தல் ஆணையம் எஸ்ஐஆர் மூலம் பறித்துள்ளது ” என தெரிவித்தார்.

Tags : BAJA ,BENGAL ,UNION ,MINISTER ,RAJNATH SINGH ,Haura ,Amtha ,Howrah ,Parivarthan Yatra ,Union Defence Minister ,Trinamool Congress ,
× RELATED நாளை திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை அடைப்பு!