×

ஒடிசாவில் மேலும் 2 நக்சல் இல்லா மாவட்டங்கள் அறிவிப்பு

புவனேஷ்வர்: ஒடிசாவில் மேலும் இரண்டு மாவட்டங்கள் நக்சல் இல்லாத மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஒடிசா முழுவதும் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தில் ஏற்கனவே நுவாபாடா, நபரங்பூர், கோராபுட், மல்காங்கிரி, பவுத், ஆகிய 5 மாவட்டங்களும் நக்சல் இல்லாத மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் அண்டை மாநிலமான சட்டீஸ்கரின் மகாசமுந்த் மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில் 15 மாவோயிஸ்ட்டுகள் போலீசார் முன்னிலையில் சரண் அடைந்தனர். இதனை தொடர்ந்து போலங்கிர் மற்றும் பர்கார் ஆகிய இரண்டு மாவட்டங்களும் நக்சல் இல்லாதவை என்று அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் நக்சல் இல்லாத மாநிலங்களின் எண்ணிக்கையானது ஏழாக அதிகரித்துள்ளது. எனினும் கந்தமால், ராயகடா மற்றும் கஹண்டி ஆகிய மூன்று மாவட்டங்களிலும் மாவோயிஸ்ட்கள் ஆதிக்கம் தொடர்கின்றது.

Tags : Naxal ,Odisha ,Bhubaneswar ,Nuabada ,Nabarangpur ,Koraput ,Malkangiri ,Boudh ,Naxal- ,
× RELATED நாளை திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை அடைப்பு!