×

2025-2026ம் ஆண்டிற்கான பிஎப் வட்டி 8.25 சதவீதமாகவே நீடிக்கும்

புதுடெல்லி: தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி விகிதம் 2025-2026ம் ஆண்டில் 8.25சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதமானது நிதி சூழலுக்கு ஏற்ப டெல்லியில் உள்ள வருங்கால வைப்பு நிதி அமைப்பின் ஒன்றிய தொழிலாளர் அறக்கட்டளை வாரிய குழு மாறறி அமைத்து வருகின்றது.

கடந்த 2024ம் ஆண்டில் ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி அமைப்பானது 2022-2023ம் ஆண்டில் 8.15சதவீதமாக இருந்த வட்டி விகிதத்தை 2023-2024ம் ஆண்டில் 8.25சதவீதமாக உயர்த்தியது. கடந்த 2024-2025ம் நிதியாண்டில் 8.25 சதவீதத்தை தக்கவைத்துக்கொண்டது. இந்நிலையில் ஓய்வூதிய நிதி அமைப்பான இபிஎப்ஓ 2025-2026ம் ஆண்டிற்கான ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி தொகைகளுக்கான வட்டி விகிதத்தை 8.25சதவீதமாக நிர்ணயித்துள்ளது. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி தொகைளுக்கான வட்டி விகிதம் 8.25 சதவீதம் நீடிப்பது குறிப்பிடத்தக்கது.

இபிஎப்ஓவின் உச்ச முடிவெடுக்கும் அமைப்பான சிபிடி நேற்று நடந்த கூட்டத்தில் 2025-2026ம் ஆண்டிற்கான இபிஎப்க்கு 8.25சதவீத வட்டி விகிதத்தை வழங்குவதற்கு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது நிதியமைச்சகத்திற்கு ஒப்புதலுக்காக அனுப்பப்படும். அரசின் ஒப்புதலுக்கு பின் 2025-2026ம் ஆண்டிற்கான வட்டி விகிதம் இபிஎப்ஓவின் 7 கோடிக்கும் மேற்பட்ட சந்தாதாரர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்படும்.

Tags : New Delhi ,Union Employees' Provident Fund Organisation ,UEFO ,Delhi ,
× RELATED நாளை திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை அடைப்பு!