×

கோத்தகிரி தேயிலை தோட்டத்தில் முதல்வர் பிறந்தநாளை பெண்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்

கோத்தகிரி : கோத்தகிரியில் உள்ள தேயிலை தோட்டத்தில் தோட்டத் தொழிலாளர் பெண்கள் கேக் வெட்டி தமிழ்நாடு முதல்வரின் பிறந்தநாளை கொண்டாடினர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் தோட்டத்தொழிலாளர் பெண்கள் ஒன்று கூடி முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாடினர். அவர்கள் பணியாற்றும் தேயிலைத் தோட்டத்திற்குள் கேக் வெட்டி ஒருவருக்கொருவர் வழங்கினர்.

மகளிர் உரிமைத்தொகை,விடியல் பயணம்,மாணவ,மாணவிகளுக்கு இலவச லேப்டாப் போன்ற திமுக அரசின் அனைத்து திட்டங்களால் பயனடைந்த தோட்டத் தொழிலாளர் பெண்கள் மீண்டும் தமிழ்நாட்டின் முதல்வராக மு.க. ஸ்டாலின் வரவேண்டும் என்றும், அதற்கு நீலகிரி மாவட்டத்தில் உள்ள தோட்டத் தொழிலாளர் பெண்கள் முழு ஆதரவளிப்பதாகவும் கூறி அவர்கள் தேயிலைத் தோட்டத்தின் நடுவே நின்று பல வண்ணங்களில் வெள்ளைத் துணியில் உதயசூரியனை பதிவு செய்தனர்.

தொடர்ந்து நீலகிரி மாவட்ட திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தில் ரங்கராஜ் தலைமையில் தேயிலை தோட்ட பெண் தொழிலாளர்களுக்கு பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கோத்தகிரி ஒன்றிய துணைச் செயலாளர் செல்வம் உட்பட திமுகவினர் கலந்து கொண்டனர்.

Tags : Chief Minister ,Kotagiri ,Tamil Nadu ,Kotagiri, Nilgiris district ,M.K. Stalin ,
× RELATED கோவில்பட்டி அருகே தீப்பெட்டி...