ஈரோடு: ஆசனூர் சோதனை சாவடியில் நேற்று போலீசார் சந்தேகப்படும் வகையில் வந்த வாலிபரை பிடித்து சோதனை செய்த போது அவரிடம் கர்நாடக மதுபானம் இருந்தது தெரியவந்தது. விசாரணையில் கோபி அடுத்த கொங்கர்பாளையத்தை சேர்ந்த சக்திவேல் (25) என்பதும், அதிக விலைக்கு விற்பனை செய்ய கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை கைது செய்தனர்.
