×

நல்லகண்ணு மறைவிற்கு அமைதி பேரணி

சென்னிமலை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் மறைவிற்கு சென்னிமலையில் அனைத்து கட்சிகளின் சார்பில் அமைதி ஊர்வலம் மற்றும் இரங்கல் கூட்டம் நடந்தது. சென்னிமலை குமரன் சதுக்கத்தில் தொடங்கிய ஊர்வலம் வடக்கு ராஜ வீதி மற்றும் கிழக்கு ராஜ வீதி வழியாக பஸ் நிலையத்தை அடைந்தது.இதை தொடர்ந்து இரங்கல் கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்தில், திமுக, அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக, தற்சார்பு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் விடியல் பொதுநல இயக்கம், திருக்குறள் பேரவை உள்ளிட்ட பொதுநல அமைப்புகளின் நிர்வாகிகளும் கலந்து கொண்டு நல்லகண்ணுவின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்கள்.‌ பெருந்துறை : பெருந்துறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் மறைவையொட்டி பெருந்துறையில் அனைத்து கட்சி சார்பில் இரங்கல் ஊர்வலம் மற்றும் புகழ் அஞ்சலி கூட்டம் நேற்று நடந்தது.

 

Tags : Nallakannu ,Chennimalai ,Communist Party of India ,Kumaran Square ,North Raja Road ,East Raja Road… ,
× RELATED இரை தேடி வந்த புறாக்கள் சந்திர...