ஈரோடு, மார்ச் 3: ஈரோடு மாவட்டத்தில் 2018 முதல் 2025ம் ஆண்டு வரையிலான பிளஸ் 1 பொதுதேர்வில் தோல்வி அடைந்தவர்கள் மீண்டும் தேர்ச்சி பெற ஏதுவாக தேர்வு இன்று (3ம் தேதி) துவங்குகிறது. மொத்தம் 135 பேர் தேர்வு எழுத உள்ளனர். காலை 10 மணிக்கு துவங்கி மதியம் 1.15 மணி வரை நடக்கிறது. இன்று தமிழ் மற்றும் இதர மொழி பாட தேர்வு நடக்கிறது. 6ம் தேதி ஆங்கிலம், 10ம் தேதி வேதியியல், கணக்குபதிவியல், புவியியல் பாட தேர்வு நடக்கிறது.
12ம் தேதி கம்ப்யூட்டர் சயின்ஸ், புள்ளியியல், ஹோம் சயின்ஸ், அரசியல் அறிவியல், நர்சிங், பயோகெமிஸ்டரி பாட தேர்வு நடக்கிறது. 18ம் தேதி இயற்பியல், பொருளியல் பாட தேர்வும், 24ம் தேதி கணிதம், விலங்கியல், வணிகவியல், வேளாண் அறிவியல், மைக்ரோ பயாலஜி பாட தேர்வு நடக்கிறது. 27ம் தேதி உயிரியல், தாவரவியல், வரலாறு, கணித கணிதம் மற்றும் புள்ளியியல், டெக்ஸ்டைல் டெக்னாலஜி உள்ளிட்ட தேர்வுகள் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளி கல்வி துறையும், தேர்வு துறையும் செய்து வருகிறது.
