×

வேதாரண்யத்தில் கிரிக்கெட் வீரர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்

வேதாரண்யம், மார்ச் 2: வேதாரண்யம் நகர பகுதியில் தோப்புத்துறை ஆறுகாட்டுதுறை, வேம்பதேவன்காடு, பூப்பெட்டி, அகஸ்தியன் பள்ளி உள்ளிட்ட 10 இடங்களில் கிரிக்கெட் விளையாடும் இளம் வீரர்களுக்கு அவர்களது விளையாட்டு திறனை மேம்படுத்த கிரிக்கெட் மட்டை, கிரிக்கெட் பந்து உள்பட உபகரணங்களை ஓ.எஸ்.மணியன் எம்எல்ஏ வழங்கினார்.

நிகழ்ச்சியில் வேதாரண்யம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கிரிதரன், மேற்கு ஒன்றிய செயலாளர் சுப்பையன், நகர செயலாளர் நமச்சிவாயம், நகர துணை செயலாளர் சுரேஷ்பாபு, அம்மா பேரவை மாவட்ட துளை செயலாளர் சோமவெங்கட்ராமன், நகர அம்மா பேரவை செயலாளர் ராஜாரத்தினம் உள்ளிட்ட வார்டு கழக செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

 

Tags : Vedaranyam ,O.S. Manian ,Thoputhurai Arukattuthurai ,Vempadevankadu ,Poopetti ,Agasthyan School ,
× RELATED சாத்தூர் அருகே மக்கள் அரங்கம்...