×

கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் காத்திருப்பு போராட்டம்

திருப்பூர், பிப். 26: திருப்பூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், சிறப்பு பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும். நில அளவை பணியாளருக்கு மேம்படுத்த பட்ட சம்பளம் வழங்க வேண்டும். ஓய்வூதிய திட்டத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்வதை கைவிட வேண்டும். கருணை அடிப்படையில் பணிநியமன உச்சவரம்பு 5 சதவீதம் என்பதை மீண்டும் 25 சதவீதமாக உயர்த்த வேண்டும்.

அனைத்து காலி பணியிடங்களையும் நிரந்தர பணியாளர்களால் நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், 2வது நாளான நேற்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த்துறையினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், ஏராளமானவர்கள் கலந்து கொண்டனா். போராட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா். இந்த போராட்டத்தின் காரணமாக அரசு அலுவலகங்களில் பணியாளர்களின் வருகை குறைவாக இருந்தது.

 

Tags : Federation of Revenue Associations ,Tiruppur ,
× RELATED அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில்...