- அங்கன்வாடி
- கஸ்தூரிபாய் தெரு, அவினாசி
- அவிநாசி
- மையம்
- பஞ்சாயத்து யூனியன் முதன்மை பள்ளி
- கஸ்தூரிபாய் தெரு
- அவினாசி நகராட்சி
அவிநாசி,பிப்.27: அவிநாசி கஸ்தூரிபாய் வீதியில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவிநாசி நகராட்சிக்கு உட்பட்ட கஸ்தூரிபாய் வீதியில் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி வளாகத்திற்குள் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது. இந்த கட்டிடம் பழுதடைந்ததால் இடிக்கப்பட்டது. இதனால், இரண்டு வருடங்களாக அருகில் உள்ள தனியார் கட்டிடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது.
எனவே, புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை உடனடியாக கட்ட வேண்டும் என பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவிநாசி நகராட்சி ஆணையர் அனுநந்தினியுடன் பெற்றோர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். எதிர்காலத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அங்கு புதிய கட்டிடம் விரைவில் கட்டித்தருவதாக உறுதி கூறியதையடுத்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை திரும்பி அழைத்து சென்றனர்.
