- கூடலூர்
- தோட்டக்கலை
- மலைப் பயிர்கள் துறை
- புத்தூர் வயல்
- கூடலூர் மாவட்டம்
- தோட்டக்கலை அலுவலர்
- பிரியங்கா
- தோட்டக்கலை துறை
கூடலூர்,பிப்.28: தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் கூடலூர் வட்டாரத்தில் அங்கக வேளாண்மை, காய்கறி பயிர் சாகுபடி பயிற்சி புத்தூர்வயல் கிராமத்தில் நடைபெற்றது. தோட்டக்கலை அலுவலர் பிரியங்கா தலைமை தாங்கினார். தோட்டக்கலை துறையின் கீழ் வழங்கும் அங்கக வேளாண்மை திட்டங்கள், ஒட்டுப் பொறி மற்றும் இன கவர்ச்சி பொறி ஆகியவற்றின் முக்கியத்துவம் மற்றும் பயன்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
மீன் அமிலம் இடுபொருள் தயாரிப்பு மற்றும் பயன்பாடு குறித்து உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் பயிற்சியாளர் ஆரோக்கியசாமி விளக்கம் அளித்து பேசினார். அங்கக வேளாண்மையில் உள்ள சந்தேகங்கள் குறித்து தோட்டக்கலை அலுவலர்களுடன் விவசாயிகள் கலந்துரையாடினர். நிகழ்ச்சியில் புத்தூர்வயல் சுற்றுவட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
