×

கூக்கல்தொரையில் காய்கறி, பழம் சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி

ஊட்டி, பிப். 26: காய்கறி மற்றும் பழம் சாகுபடிக்கான தொழில்நுட்ப பயிற்சி கூக்கல்தொரை கிராமத்தில் தோட்டக்கலைத்துறை மூலம் வழங்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் அங்கக வேளாண்மை ஊக்குவிக்கும் வகையில் காய்கறி மற்றும் பழம் சாகுபடிக்கான தொழில்நுட்ப பயிற்சிகள் கோத்தகிரி வட்டாரத்திற்கு சார்ந்த அனைத்து கிராமங்களுக்கும் வழங்கப்பட உள்ளது. முதற்கட்டமாக, கூக்கல்தொரை கிராமத்தில் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்பட்டது. இப்பயிற்சியில் கூக்கல்தொரை ஊர் தலைவர் மணி முன்னிலை வகித்தார்.

தோட்டக்கலை உதவி இயக்குனர் பரத்குமார் திட்டங்கள் குறித்து சிறப்புரையாற்றினார். மேலும், வேளாண்மை, தோட்டக்கலை துறை சார்ந்த அலுவலகம், மண் பரிசோதனை நிலையம், வேளாண்மை பொறியியல் துறை, கால்நடைத்துறை, வேளாண் ஆராய்ச்சி நிலையம், பயிர் காப்பீட்டு நிறுவனம் போன்ற துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனர். இதில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

 

Tags : Kookkalthorai ,Ooty ,Horticulture Department ,Nilgiris ,
× RELATED திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு