×

குன்னூர், கோத்தகிரி, கூடலூரில் விலங்குகள் பிறப்பு கட்டுப்பாடு மையம் திறப்பு

ஊட்டி, பிப். 26: குன்னூர், கோத்தகிரி மற்றும் கூடலூரில் விலங்குகள் பிறப்பு கட்டுப்பாடு நிலையம் திறக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 100 விலங்குகள் பிறப்பு கட்டுப்பாடு நிலையம் திட்டத்தின் கீழ் குன்னூர் மறறும் கூடலூர் கால்நடை மருத்துவமனைகள் மற்றும் கோத்தகிரி கால்நடை மருந்தகம் ஆகிய 3 கால்நடை நிலையங்களில் விலங்குகள் பிறப்பு கட்டுப்பாடு நிலையம் (எபிசி சென்டர்) கடந்த 17ம் தேதி முதல் துவங்கப்பட்டு தற்போது அறுவை சிகிச்சை பணி நடைபெற்று வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் வளர்ப்பு நாய்கள் வைத்துள்ள விருப்பமுள்ளவர்கள் சம்பந்தப்பட்ட விலங்குகள் பிறப்பு கட்டுப்பாடு நிலையத்திற்கு கொண்டு வந்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் என கால்நடை பராமரிப்புத்துறை தெரிவித்துள்ளது.

 

 

Tags : Animal Birth Control Centers ,Coonoor, Kotagiri ,Gudalur ,Ooty ,Coonoor ,Kotagiri ,Animal ,Nilgiris district ,Coonoor and Gudalur Veterinary Hospitals ,Kotagiri Veterinary Dispensary… ,
× RELATED திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு