- யமதுவரபாலகன்
- பைரவர்
- யமன்
- அம்பிகை
- யமதுவரபாலகன்
- திருவையமராத்தூர்
- கொடியனூர்
- திருமியச்சூர்
- பைரவத்தானா
- யமதருமனா
- சனீஷ்வர்
- பைரவர்
- திருவாரூர்
- கமலாம்பிகை
* யமத்துவாரபாலகன், பைரவர்: அம்பிகை தவம் செய்யும் போது யமன் காவலாக உள்ளான். திருவிடைமருதூரில் யமதுவாரபாலகனாக உள்ளார். திருமியச்சூர் அருகில் கொடியனூரில் யமன் பைரவத்தானத்தில் உள்ளான் இங்கு பைரவருக்கு அருகில் யமதருமனும் அவன் சகோதரனுமான சனீச்வரனும் உள்ளனர்.
* திருவாரூர் கமலாம்பிகை கோயில் கருவறை வாயிற்காப்போன்: சங்கநிதி, பதுமநிதி, ஜிவரஹரேசம் (காஞ்சி) இந்திரன், குபேரன் சேர்ந்து வழிபட்டது. இங்கு மூலஸ்தானத்தில் லிங்கம் பின்புறம் இந்திரன் உள்ளான். கோயில் வாசல் இருபுறம் சங்கநிதி, பதுமநிதி யக்ஷர்கள் வடிவில் உள்ளனர்.
* கோவை பேரூர் ஆலயம் எதிரில், அரசமரம் கீழ் கேதாரீசுவரர் ஆலயம் உள்ளது. சுந்தரர் இங்கு வந்த போது, பெருமானும் அம்பிகையும் உழவன் உழத்தியாக வேடம் தாங்கி அருகில் வயல்வெளியில் பணி செய்து கொண்டிருந்தனர்.
(கேதாரம்- வயற்வெளி)
* பஞ்சகல்யாணித் திருத்தலங்கள்: தென்பாண்டிநாட்டில் உள்ள ஆழ்வார்குறிச்சி (சிவசைலம்) கடையம், ராதாபுரம் சேரகுளம், அம்பாசமுத்திரம் ஆகிய 5 ஊர்களில் உள்ள அம்பிகைக்கு ‘கல்யாணி’ என்பர். அதனால் இவை ஐந்தும் பஞ்சகல்யாணி தலம்.
* அசுரர்களை அழிக்க திருமால் கொண்ட 10 அவதாரங்களில் ஒன்பது அவதாரங்களில், பல அசுரர்களை அழித்த திருமால், வாமன அவதாரத்தில் மட்டும் சிவாலயத்தில் விளக்கு ஏற்றிய (எலி) புண்ணியம் செய்த மகாபலியை அழிக்காமல் பாதாளத்திற்கு அரசனாக்கினான்.
* குற்றாலத்தில் இருந்த திருமால் வடிவை, அகத்தியர் சிவலிங்கமாக்கினார். திருமேற்றளீசுவரர் (காஞ்சி) ஓதவுருதீசர் முன்பு திருமால் சம்பந்தரின் தேவாரப்பாடல்களை (வேதத்திலுள்ள உருத்திரமந்திரங்களை) ஓதக்கேட்டு உருகி தானே சிவலிங்க வடிவமாகி விட்டார்.
* திருவீழிமிழலை, திருவிடைமருதூரில் கண்ணன் சிவபூஜை செய்தார். திருவிடைமருதூரில் மருதமரம் கீழ் கண்ணன் சிற்றலாயம் உள்ளது. இங்கு கண்ணுவ மகரிஷி பூசித்த போது ஈசன் அவருக்கு கண்ணனாக காட்சித் தந்தார்.
* சேந்தனார் (திருவிசைப்பா) பட்டினத்தார் தலைமை கணக்கர் தைபூசம் முக்தி திருவிடைக்கழியில் சிவன், உமா, முருகன் மூவருமே வந்து அவரை கயிலைக்கு அழைத்து சென்றது – வரலாறு.
* மன்மதன் அவதரித்த நாள் மாசி மாதம் பௌர்ணமி, திருமால் கிருஷ்ணனாக அவதாரம் செய்த போது மன்மதன் அவர் மகனாக பிரத்யும்னன் பெயரில் தோன்றுதல், ரதி மாயாதேவி பெயரில் அவனை மணந்தாள்.
* திருக்கடையூரில் சிவன் மார்க்கண்டேயருக்காக அஷ்டருத்திரர்களை ஏவி எமனை சங்கரித்தார். ருத்திரனின் அம்சமாகத் தோன்றிய மகாருத்திரர் சிவலிங்கத்திலிருந்து வெளிப்பட்டு யமனை அழித்து மார்க்கண்டேயனைக் காத்தார்.
* ராசீபுரம் கயிலாயநாதர் ஆலயம் வடமேற்கு முனை விசுவநாதர் சந்நதி, தென்மேற்கு முனை ராமநாதர் சந்நதி மூலவர் கைலாசந்தார். ஒரே ஆலயத்தில் விசுவநாதர், ராமநாதர், கைலாச நாதர் சந்நதி உள்ளது.
* பஞ்சபூததலமும் மகேஸ்வர வடிவம்.
1) ஆகாசம் – சிதம்பரம் – நடராஜர்.
2) காற்று – திருக்காளத்தி – தட்சிணாமூர்த்தி.
3) நெருப்பு – திருவண்ணாமலை – அர்த்தனாரீஸ்வரர்.
4) நீர் – திருவானைக்காவல் (திருச்சி) – சந்திரசேகரர்.
5) மண் – காஞ்சி – சோமாஸ்கந்தர்.
* திருத்துருத்தி (குத்தாலம்) சிவன் திருமண கோலம் கொண்டபோது, தேவர்கள் வேதமாகிய பாதுகைகளை அளித்தனர். திருமணம் முடிந்தபின் ஈசன் பாதுகைகளை குத்தாலம் ஆலயம் உத்தால மரத்தின் கீழ் விட்டு சென்றார்.
*திருப்பாற்கடல் (காஞ்சி) பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் ஆலயத்தில், மூலத்தானத்தில் ஆவுடையார் மீது ருத்திர பாகத்திற்கு பதில் திருமால் நின்றுள்ளார்.
* லம்போதரன், குண்டோதரன் என்னும் பிரதமகணங்கள் சிவனுடைய ஆணையால் விநாயகப் பெருமானுக்கு தலைமை பணியாளர்களாகவும், அவர்களின் ஆலயத்தின் துவாரபாலகர்களாகவும் விளங்குகின்றனர்.
ஜி.ராகவேந்திரன்
