தாம்பரம் – சென்னை கடற்கரை இடையே இன்று முதல் கூடுதலாக 20 விரைவு மின்சார ரயில்கள் இயக்கம்!

 

சென்னை: தாம்பரம் – சென்னை கடற்கரை இடையே இன்று (பிப்.27) முதல் கூடுதலாக 20 விரைவு மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த விரைவு ரயில்கள் மாம்பலம், கிண்டி மற்றும் எழும்பூரில் நின்று செல்லும். எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைமேடை 10, 11-ல் பராமரிப்பு பணி காரணமாக புறநகர் ரயில் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் சிரமத்தை குறைக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

 

Related Stories: