×

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல்

ஈரோடு, பிப். 25: ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட மாநகராட்சி கவுன்சிலர் செந்தில்குமார் விருப்ப மனு அளித்துள்ளார். தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. இதற்காக அனைத்து கட்சியினரும் விருப்ப மனு பெற்று வருகின்றனர். திமுக தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் கட்சியினரிடம் விருப்ப மனு பெறப்பட்டு வருகிறது.

இதில், ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, ஈரோடு மாநகர விவசாய அணி துணை அமைப்பாளரும், மாநகராட்சி 36வது வார்டு கவுன்சிலருமான பழனியப்பா செந்தில் என்ற செந்தில்குமார் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.

மேலும், ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தி கவுன்சிலர் செந்தில்குமார், விருப்ப மனுக்களையும், விண்ணப்ப கட்டணத்தையும் செலுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags : Erode East Constituency ,Erode ,Municipal Councillor ,Senthilkumar ,Dimuka ,Erode East ,Tamil Nadu ,
× RELATED பாம்பு கடித்து பெண் சாவு