- கொட்டறை
- அரசு
- பள்ளி
- Patalur
- தமிழ்
- தமிழ்நாடு
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- கொட்டரை அரசு மேல்நிலைப்பள்ளி
- ஆலத்தூர் தாலுகா, பெரம்பலூர் மாவட்டம்
- பள்ளி கல்வித் துறை
- செயலகம்
- சென்னை
பாடாலூர், பிப். 27: கொட்டரை அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் திறந்துவைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை, தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி வாயிலாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா கொட்டரை அரசு உயர் நிலைப்பள்ளியில் ரூ.1.17 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 4 புதிய கூடுதல் வகுப்பறை கட்டிடங்களைதிறந்து வைத்தார்.
இதையடுத்து கொட்டரை பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும், முன்னாள் ஒன்றிய குழு தலைவருமான என்.கிருஷ்ணமூர்த்தி, ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இதில் மருவத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கயல்விழி, பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) ராஜேந்திரன், மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் சுப்ரமணியன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் இளவரசு மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
