- மோடி
- மதுரா
- திருப்பரங்குந்தரம்
- சென்னை
- மதுரை பஜ்வினார்
- திருப்பரங்குன்றம்
- திருப்பிரங்குந்தரம்
- தஞ்சாவூர், தமிழ்நாடு
சென்னை: பிரதமர் மோடி திருப்பரங்குன்றம் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று மதுரை பாஜவினர் கூறிவருகின்றனர். மார்ச் 1ம் தேதி மதுரை வரவுள்ள பிரதமர் மோடி, அன்றைய தினம் மாலை சமீபத்தில் மிகுந்த சர்ச்சைக்குள்ளான திருப்பரங்குன்றம் கோயிலுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். தமிழகத்தின் தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு எப்படி ஒரு நெகட்டிவ் சென்டிமென்ட் உள்ளதோ, அதுபோல திருப்பரங்குன்றம் சென்று திரும்பும் அரசியல்வாதிகளுக்கும் ஒரு நெகட்டிவ் சென்டிமென்ட் உள்ளது எனக்கூறி உள்ளூர் பாஜவினர் தவிர்க்க கூறுகின்றனர்.
திருப்பரங்குன்றத்திற்கு சென்று சிறப்பு பூஜை செய்து திரும்பும் அரசியல்வாதிகளுக்கு பிரச்னையே ஏற்பட்டுள்ளது. 2016ல் திருப்பரங்குன்றம் எம்எல்ஏவாக வெற்றி பெற்ற சீனிவேல் பதவியேற்பிற்கு முன்னரே மாரடைப்பால் காலமானார். அதன் பின்னர் நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற ஏ.கே.போஸும் மாரடைப்பால் காலமானார். திருப்பரங்குன்றம் மலையில் தீபமேற்றும் பிரச்சினையை முன்னின்று நடத்திய பாஜ முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சமயத்தில் பிரதமர் மோடி திருப்பரங்குன்றம் வந்து சிறப்பு பூஜைகள் செய்வது தேவையற்றது என்று உள்ளூர் பாஜவினர் தேசியத் தலைமைக்கு தெரியப்படுத்தி திருப்பரங்குன்றம் நிகழ்ச்சியை ரத்து செய்ய கோரியுள்ளனர்.
