×

வருவாய்த்துறை ஊழியர்கள் போராட்டம் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 3 நாட்களாக தமிழ்நாடு முழுவதும் வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நில அளவீடு செய்வது, பட்டா மாற்றம் செய்வது, இருப்பிடம் சாதி வருமானம் உள்ளிட்ட அனைத்து வகையான சான்றிதழ்கள் பெறுவது போன்ற பொதுமக்களின் அன்றாட பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே வருவாய்த்துறை, பேரிடர் மேலாண்மை துறை, நில அளவைத் துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Ramadas ,Chennai ,Palamaka ,Tamil Nadu ,
× RELATED அவரோட படத்த ஓட வச்சதே நாங்க தான்! நல்ல...