×

பிரைவேட் ஜெட்டில் அரசியல் செய்யும் விஜய்: செங்ஸ் லீலைகள் ஊருக்கே தெரியும்; ஞாபகப்படுத்தும் அப்சரா ரெட்டி

ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாளையொட்டி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் தேரடி வீதியில் நேற்று முன்தினம் இரவு பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்க சிறப்பு கவனிப்புகளுடன் அழைத்து வரப்பட்ட கூட்டம், முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் பேசுவதற்கு முன்பே ஒவ்வொருவராக கலைந்து செல்ல ஆரம்பித்தனர். அதையும் பொருட்படுத்தாமல் எம்.சி.சம்பத் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்க அங்கிருந்தவர்கள் ஆளில்லாத கடையில் ஏன் இவர் டீ ஆத்திக் கொண்டு இருக்கிறார் என கலாய்த்தபடி அங்கிருந்து புறப்பட்டனர்.

இந்த கூட்டத்தில் அதிமுக செய்தி தொடர்பாளர் அப்சரா ரெட்டி பேசுகையில், ‘தவெகவில் இருக்கும் செங்கோட்டையன் அதிமுகவில் அனைத்து பதவிகளையும் அனுபவித்து கொண்டார். அவரது வரலாறு அனைவருக்கும் தெரியும். ஜெயலலிதாவிடம் செங்கோட்டையன் மனைவி புகார் கூறியதால் அவரை கட்சியில் இருந்து ஒதுக்கியே வைத்திருந்தார். அதுதான் அவரது வரலாறு. அவரது லீலைகள் அனைவருக்கும் தெரியும். எடப்பாடியார், பாவம் பார்த்து அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்தார்.

தற்போது தவெகவில் சென்று விஜய்யை பார்த்து இளைய தளபதி, வெற்றி தளபதி என கூவிக் கொண்டிருக்கிறார். இதுதான் அவருக்கு கடைசி அத்தியாயம். தவெக ஒரு கட்சி வந்து கூவிக் கொண்டு இருக்கிறார்கள். விஜய் வந்து ரூ.5 கோடி கார், பிரைவெட் ஜெட்டில் மட்டும் தான் அரசியல் செய்ய முடியும். விஜய் வந்து உங்களை சந்தித்து இருக்கிறாரா? விஜய் கட்சியில் இருந்து யாராவது வந்து சந்தித்து இருக்கிறார்களா?. விஜய் வொர்க் பிரம் ஹோம் பொலிட்டீசியன். விஜய் வீட்டில் இருந்து தான் அரசியல் செய்வார்,’ என்றார்.

* நாளைக்குள் கூட்டணி அறிவிப்பு ஒரு முடிவுக்கு வந்தார் ராமதாஸ்
பாமக இரண்டாக உடைந்து உள்ள நிலையில், அன்புமணி தலைமையிலான பாமக, தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து உள்ளது. ராமதாஸ் இன்னும் தனது நிலைப்பாட்டை அறிவிக்காமல் உள்ளார். ஆனால், அதிமுக மற்றும் பாஜ ஆகிய கட்சிகளின் தலைவர்கள், ராமதாசிடம் பல ஆபர்கள் கொடுத்து கூட்டணி வர சொல்லி கெஞ்சி வருகின்றனர். இருந்தும் அன்புமணி இருக்கும் இடத்தில் நான் இருக்க மாட்டேன் என்று ராமதாஸ் தொடர்ந்து பிடிவாதமாக இருக்கிறார். இந்நிலையில், கூட்டணி நிலைப்பாடு குறித்து தைலாபுரத்தில் நேற்று வன்னியர் சங்க மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த வந்த ராமதாசிடம், கூட்டணி குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர், ‘‘யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். அதன்பிறகே எந்த வாகனத்தில் ஏறி பயணிக்க இருக்கிறோம் என்பது தெரியவரும். இதுவரை கூட்டணிக்கான சூழல் அமையவில்லை’’ என்றார். திராவிட கட்சிகளுடன் கூட்டணி இருக்குமா? என கேட்டபோது, ‘‘கூட்டணி இருக்கும், வரும் 28 தேதிக்குள் (நாளை) கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியாகும்’’ என்றார். பின்னர், நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்தி கருத்துகளை கேட்டார். அப்போது, சசிகலா, ஓபிஎஸ், பாமக என 3வது அணிக்கு முயற்சிக்கலாம் என நிர்வாகிகள் கூறியதாக தெரிகிறது. கூட்டத்துக்கு பின்னர் அருள் எம்எல்ஏ அளித்த பேட்டியில், எந்த கூட்டணியும் இன்னும் உறுதியாகாத நிலையில் ஏன் அவசரப்பட வேண்டும். பாமகவை மதித்து எங்களோடு கூட்டணி வைக்க விரும்புபவர்களோடுதான் எங்களது கூட்டணி. அது வெற்றிக் கூட்டணியாக இருக்கும்’ என்றார்.

Tags : Vijay ,Leela ,Apsara Reddy ,Thirupadhiripuliyur Theradi Road ,Cuddalore ,Jayalalithaa ,minister ,M.C. Sampath ,
× RELATED தேர்தல் கூட்டணி தொடர்பாக...