×

திருச்சுழி அருகே ரூ.23 கோடியில் சாலை பணி தீவிரம்

திருச்சுழி, பிப்.26: திருச்சுழி அருகே நான்குவழிச் சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகளை கோட்ட பொறியாளர் ஆய்வு செய்தார். திருச்சுழி தொகுதிக்கு உட்பட்ட அருப்புக்கோட்டை வாலிநோக்கம் சாலையில் கமுதி விலக்கு முதல் செட்டிகுளம் விலக்கு வரை ஆறு கிலோமீட்டர் அளவிற்கு கடந்த ஆண்டு நான்குவழிச் சாலையாக மாற்றப்பட்டது. இதில் மக்கள் போக்குவரத்து இடையூறின்றி செல்கின்றனர்.

அருப்புக்கோட்டை வாலிநோக்கம் சாலை ரூ.23 கோடி மதிப்பீட்டில் பரளச்சி துணை மின் நிலையம் முதல் இராணி சேதுபுரம் விலக்கு வரை இரு வழி தடத்திலிருந்து நான்கு வழி தடமாக மாற்றும் பணி கடந்த டிசம்பர் மாதம் முதல் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது 50 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இந்நிலையில் கோட்ட பொறியாளர் பாக்கியலட்சுமி பணியினை ஆய்வு செய்தார். பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடிக்குமாறு அறிவுறுத்தினார். உடன் உதவி கோட்ட பொறியாளர் முத்துசாமி, உதவிப் பொறியாளர் தினேஷ் குமார் மற்றும் பணியாளர்கள் இருந்தனர்.

 

 

Tags : Tiruchuzhi ,Kamudi ,Chettikulam ,Aruppukottai Valinokkam road ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்