×

வெள்ளகோவிலில் தனியார் பள்ளி வேன் மீது அரசு பஸ் மோதி விபத்து

வெள்ளகோவில்,பிப்.21: வெள்ளகோவில் அருகே பள்ளிவேன்- அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானது. ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளி வேன் ஒன்று நேற்று திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பழைய பேருந்து நிலையம் அருகே பள்ளி குழந்தைகளை ஏற்றிக்கொண்டு வீரக்குமாரசாமி கோவில் அருகே வலது பக்கம் மேற்கு நோக்கி திரும்பியது. அப்போது கோவையில் இருந்து திருச்சியை நோக்கி வந்த அரசு பஸ் திடீரென பள்ளி வேனின் பின்பகுதியில் மோதியது.

இதனால் பஸ்சின் முன் பகுதியிலும், வேனின் பின் பகுதியும் சேதமான. ஆனால் நல்வாய்ப்பாக பஸ் பயணிகள், பள்ளி வேனில் இருந்த குழந்தைகள் காயமின்றி உயிர் தப்பினர். இது குறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது போன்ற விபத்துகளை தவிர்க்க வெள்ளகோவில் நகர் பகுதிகளில் காலை மற்றும் மாலை பள்ளி நேரங்களில் வேகமாக செல்லும் வாகனங்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

Tags : Vellakovil ,Erode ,Vellakovil, Tirupur district ,Veerakumaraswamy temple ,
× RELATED மதுரை, தேனிக்கு கூடுதல் பஸ் வசதி கேட்டு பயணிகள் மறியல்