×

கறம்பக்குடி அருகே வேளாண் கல்லூரி மாணவிகளின் மர நடுகை, மண் ஈரப்பதம் பயிற்சி

கறம்பக்குடி : கறம்பக்குடி அருகே வேளாண் கல்லூரி மாணவிகளின் மர நடுகை, மண் ஈரப்பதம் பயிற்சி நடைபெற்றது.புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஆலங்குடி கொத்தமங்கலம் பகுதியை சேர்ந்த வட்டாரம் விவசாயிகளுக்கு சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி ஆராய்ச்சி நிறுவனத்தின் இறுதி ஆண்டு மாணவிகள் சார்பாக சமூக பணியாக மர நடுகை மற்றும் மண் ஈரப்பதம் குறியீட்டு பயிற்சி யை நடத்தி காண்பித்தனர் வேளாண்மை கல்லூரி மாணவிகளான பானுப்ரியா, தருனிஷா, பவி தேவி, பொர்ச்செல்வி, ரேஸ்மி கிருஷ்ணா, ஸ்வாதி உள்ளிட்ட வேளாண்மை கல்லூரி மாணவிகள் நடத்திய மண் ஈரப்பதம் குறியீட்டு பயிற்சி முகாமில் விவசாயிகள் பெண்கள் சுய உதவி குழு உறுப்பினர் கள் மற்றும் இளைஞர் கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் மேலும் நிகழ்ச்சி யின் தொடக்கத்தில் சுற்று சூழல் பாதுகாப்பு மற்றும் நிலைத்த விவசாயத்திற்கு மர நடுகையின் அவசியம் குறித்து மாணவிகள் சார்பாக விளக்க பட்டது.

மாணவிகள் பல்வேறு பயிர்களில் நீரை சரியான அளவில் பயன்படுத்த மண் ஈரப்பதம் குறியீட்டு முறையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர் இந்த முறையை பயன்படுத்துவதன் மூலம் நீர் சேமிப்பு செலவு குறைப்பு மற்றும் பயிர்களின் வளர்ச்சி மேம்பாடு கிடைக்கும் என விளக்கினர்.

மேலும் எளிய பொருட்களை பயன்படுத்தி மண் ஈரப்பதம் குறியீட்டு கருவி தயாரிக்கும் முறையையும், அதை வயல்களில் பயன் படுத்தும் நடைமுறை களையும் நேரடி விளக்கமாக வழங்கினர்.

விவசாயிகள் ஆர்வத்துடன் பயிற்சியில் கலந்து கொண்டு சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்றனர். இன்னிசை மர நடுகை மூலம் சுற்றுசூழல் பாதுகாப்பையும், மண் ஈரப்பதம் கண்காணிப்பு மூலம் நீர் மேலாண்மை யையும் மேம்படுத்தும் நோக்கில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியின் இறுதியாக விவசாயிகள் மாணவிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.

Tags : Karambakudi ,Agriculture College ,Pudukkottai District ,Alangudi ,Kothamangalam ,Setu Paskara Agricultural College Research Institute ,
× RELATED திராவிட மாடல் ஆட்சியில் ஆதிதிராவிட –...