×

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

*மொத்தம் 22,33,628 பேர்; நீக்கம் 2,04,995 பேர்

ராமநாதபுரம்/சிவகங்கை : வாக்காளர் பட்டியல் இறுதி சிறப்பு தீவிர திருத்தத்தின்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளிலும் 85,661 வாக்காளர்களும், சிவகங்கை மாவட்டத்தில் 1,19,334 வாக்காளர்களும் நீக்கப்பட்டுள்ளனர்.

வாக்காளர் பட்டியல் இறுதி சிறப்பு தீவிர திருத்தப்பணி நிறைவுற்று, நேற்று ராமநாதபுரம் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை அரசியல் கட்சியினர் முன்னிலையில் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டார்.

கடந்த அக்.27ம் தேதியன்று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில், மாவட்டத்தில் உள்ள பரமக்குடி (தனி), திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர் ஆகிய 4 தொகுதிகளில் ஆண் வாக்காளர்கள் 5,99,183 பேரும், பெண் வாக்காளர்கள் 6,09,441 பேரும், 66 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 12,08,690 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர்.

இதனையடுத்து கடந்த டிச.19ம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியில், இறந்தவர்கள் 51,439 பேர், இரட்டைப்பதிவு 9,424 பேர், முகவரியில் இல்லாதவர்கள் மற்றும் நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள் 56,501 என மொத்தம் 1,17,364 வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தனர்.

அதன் பிறகு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்படி நான்கு தொதிகளிலும் ஆண் வாக்காளர்கள் 5,41,332 பேரும், பெண் வாக்காளர்கள் 5,49,939 பேரும், 55 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 10,91,326 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர்.

இந்நிலையில், மேல்முறையீடு காலங்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் ஆண் வாக்காளர்கள் 17,108 பேரும், பெண் வாக்காளர்கள் 19,462 பேரும், மூன்றாம் பாலின வாக்காளர்கள் 3 பேரும் என மொத்தம் 36,573 பேர் புதியதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். மேலும் இதே காலகட்டத்தில் பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் 2,119 ஆண், 2748 பெண், 3 மூன்றாம் பாலினத்தவர் என 4,870 பேர் நீக்கம் செய்யப்பட்டனர்.

பரமக்குடி

நேற்றைய இறுதி வாக்காளர் பட்டியல் நிலவரப்படி பரமக்குடி தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,15,701 பேரும், பெண் வாக்காளர்கள் 1,17,714 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 18 பேரும் என மொத்த வாக்காளர்கள் 2,33,433 வாக்காளர்கள் உள்ளனர்.

திருவாடானை

திருவாடானை தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,40,103 பேரும், பெண் வாக்காளர்கள் 1,41,997 பேரும்,மூன்றாம் பாலினத்தவர்

21 பேரும் என மொத்தம்2,82,121 வாக்காளர்கள் உள்ளனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,52,412 பேரும், பெண் வாக்காளர்கள் 1,57,740 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 13 பேரும் என மொத்தம் 3,10,165 வாக்காளர்கள் உள்ளனர்.

முதுகுளத்தூர்

முதுகுளத்தூர் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,48,105 பேரும், பெண் வாக்காளர்கள் 1,49,202 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 3 பேரும் என மொத்தம் 2,97,310 வாக்காளர்கள் உள்ளனர்.

மொத்தம் 4 தொகுதிகளிலும் ஆண் வாக்காளர்கள் 5,56,321 பேரும், பெண் வாக்காளர்கள் 5,66,653 பேரும், 55 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 11,23,029 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த அக்.27க்கு பிறகு நடந்த இறுதி வாக்காளர் பட்டியல் நிலவரப்படி 85,661பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம்

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் எஸ்ஐஆர் பணிக்கு பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதனை கலெக்டர் பொற்கொடி வெளியிட்டார். ஏற்கனவே எஸ்ஐஆர் பணிக்கு முன்பு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் பெண்கள் 6,27,251 பேரும், ஆண்கள் 6,02,622 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 60 நபர்கள் உள்பட மொத்தம் 12,29,933 வாக்காளர்கள் இருந்தனர்.

கடந்த டிசம்பரில் எஸ்ஐஆர் பணிக்கு பிறகு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் மொத்தம் 1,50,828 வாக்காளர்கள் நீக்கப்பட்டு மொத்தம் 10,79,105 வாக்காளர்கள் இருந்தனர்.

இந்நிலையில் நேற்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் பெண்கள் 5,66,526 பேரும், ஆண்கள் 5,44,035 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 38 நபர்கள் உள்பட மொத்தம் 11,10,599 வாக்காளர்கள் உள்ளனர். எஸ்ஐஆர் பணிக்கு பிறகு 1,50,828 வாக்காளர்கள் நீக்கப்பட்ட நிலையில் கடந்த இரண்டு மாதங்களில் 31,494 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதையடுத்து எஸ்ஐஆர் பணிக்கு பிறகு நீக்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 1,19,334 ஆக உள்ளது.

காரைக்குடி

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளில் காரைக்குடி தொகுதி 1,48,87 ஆண் வாக்காளர்களும், 1,55,256 பெண் வாக்காளர்களும், மற்றவர் 28 உட்பட மொத்தம் 3,03,371 வாக்காளர்களுடன் அதிக வாக்காளர்களை கொண்ட சட்டமன்ற தொகுதியாக உள்ளது.

மானாமதுரை

குறைந்த வாக்காளர்களை கொண்ட தொகுதியாக மானாமதுரை(தனி) தொகுதி உள்ளது. இங்கு 1,26,565 ஆண் வாக்காளர்களும், 1,31,048 பெண் வாக்காளர்களும், மற்றவர் 3 பேர் உள்பட மொத்தம் 2,57,616 வாக்காளர்கள் உள்ளனர்.

திருப்புத்தூர்

திருப்புத்தூர் சட்டமன்ற தொகுதியில் 1,34,270 ஆண் வாக்காளர்களும், 1,39,183 பெண் வாக்காளர்களும், மற்றவர் 3 பேர் உள்பட மொத்தம் 2,73,456 வாக்காளர்கள் உள்ளனர்.

சிவகங்கை

சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் 1,35,113 ஆண் வாக்காளர்களும், 1,41,039 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 4 பேர் உள்பட மொத்தம் 2,76,156 வாக்காளர்களும் உள்ளனர்.
மாவட்டத்தில் நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 1,364ல் இருந்து 1,518ஆக அதிகரித்துள்ளது.

வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சியில் தேவகோட்டை சப்-கலெக்டர் ஆயுஷ் வெங்கட்வாட்ஸ், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, ஆர்டிஓ ஜெபிகிரேசியா, உதவி ஆணையர் சிவபாலன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சையது முகைதீன் இப்ராகிம், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) விஜயகுமார், தாசில்தார் மேசியாதாஸ் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Ramanathapuram ,Sivaganga ,Ramanathapuram district ,Sivaganga district ,
× RELATED திராவிட மாடல் ஆட்சியில் ஆதிதிராவிட –...