×

கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்பாலை தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது.இக்கூட்டத்தில், அச்சங்குளம் கூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் கோரிக்கை மனு அளித்தனர்.

இது குறித்து தொழிலாளர்கள் கூறியதாவது: கமுதி அருகே உள்ள அச்சங்குளத்தில் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் கூட்டுறவு நூற்பாலை செயல்பட்டு வருகிறது. இதில் 135க்கும் மேற்பட்ட நிரந்தர மற்றும் தற்காலிக பணியாளர்கள், தொழில் நுட்ப தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறோம். இந்த நூற்பாலையில் கைத்தறி துணி உற்பத்திக்கு தேவையான சிட்டா நூல் உற்பத்தி செய்யும் பணிகள் நடைபெறுகிறது.

ஆலைக்கு தற்போது பஞ்சு கொள்முதல் செய்யப்படாததால் இயந்திரங்கள் இயக்கப்படாமல் உள்ளது. மூன்று ஷிப்ட்கள் வழங்கப்பட்ட நிலையில் தற்போது வேலை நேரம் குறைத்து இரண்டு ஷிப்ட் மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும் 2021ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டில் கொடுக்கப்பட வேண்டிய ஊதிய உயர்வுநிலுவைத் தொகை, வைப்பு நிதி, சுற்றுலாபடி நிலுவையில் உள்ளது.

இஎஸ்ஐ மற்றும் இபிஎப் 6 மாதங்களாக பணம் செலுத்தப்படாமல் உள்ளது. மேலும் நிதிநிலையை காரணம் காட்டி ஆலை செயல்பாட்டை முடக்காமல், தொடர்ந்து முழுமையாக இயங்க வேண்டும். ஆலையில் பணிபுரிகின்ற தொழிலாளர்களின்வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

 

Tags : Ramanathapuram ,Office Complex ,Kamudi ,
× RELATED திராவிட மாடல் ஆட்சியில் ஆதிதிராவிட –...