- ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன்
- காந்த்
- கிரண் ஜார்ஜ்
- தன்வி
- இந்தியா
- முலீம்
- அந்தெர்ரூர்
- ஜெர்மன் ஓபன் சூப்பர் 300 பேட்மிண்டன்
- ஜெர்மன் ஓபன் சூப்பர் 300
- முலீம் அந்தெர்ரூர்
- இந்தியா...
முலீம் ஆன்தெர்ரூர்: ஜெர்மன் ஓபன் சூப்பர் 300 பேட்மின்டன் போட்டிகள் இன்று துவங்குகின்றன. ஜெர்மன் ஓபன் சூப்பர் 300 பேட்மின்டன் போட்டிகள் இன்று முதல் முலீம் ஆன்தெர்ரூர் நகரில் நடைபெற உள்ளன. இப்போட்டிகளில் இந்தியாவை சேர்ந்த முன்னாள் உலக நம்பர் 1 வீரர் காந்த் கிடாம்பி, கிரண் ஜார்ஜ், வீராங்கனை தான்வி சர்மா உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். முதல் நாளான இன்று நடக்கும் ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டிகளில் இந்திய வீரர் கிரண் ஜார்ஜ், பிரான்ஸ் வீரர் கிறிஸ்டோ போபோவ் உடன் மோதவுள்ளார். மற்றொரு போட்டியில் இந்திய வீரர் தருண் மன்னெபள்ளி, தைவான் வீரர் சு வெய் உடன் களம் காண்கிறார்.
தகுதிச் சுற்றில் வெல்லும் வீரர் ஒருவருடன் தனது முதல் போட்டியில் காந்த் கிடாம்பி ஆடவுள்ளார். மகளிர் பிரிவில் இன்று நடக்கும் போட்டி ஒன்றில் இந்தியாவை சேர்ந்த நட்சத்திர வீராங்கனை தான்வி சர்மா, மலேசியா வீராங்கனை வாங் லிங் சிங் உடன் மோதுகிறார். இன்னொரு போட்டியில் மாளவிகா பன்சோட், டென்மார்க் வீராங்கனை எல்.ஜார்ஸ்பெல்ட் உடன் போட்டியிடுகிறார். தவிர, இந்திய வீராங்கனைகள் ஆகர்ஷி காஷ்யப், தாஸ்னிம் மிர், இஷாராணி பரூவா உள்ளிட்டோர் இன்று களமாடுகின்றனர். ஜெர்மன் ஓபன் பேட்மின்டன் போட்டிகள், வரும் மார்ச் 1ம் தேதி நிறைவடைகின்றன.
