அகமதாபாத்: 2026 டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவிடம் 76 ரன் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. இதன் மூலம் டி20 உலகக்கோப்பையில் இந்தியாவின் 12 போட்டிகளில் தொடர் வெற்றிப் பயணம் முடிவுக்கு வந்தது. இந்திய பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டம் குறித்து முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்திய வீரர்கள் ஆடுகளத்தின் தன்மையைப் புரிந்துகொள்ளாமல், கண்மூடித்தனமாக பேட்டை சுழற்றியதே தோல்விக்குக் காரணம்.
3 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான சூழலில் தத்தளித்த தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் பிட்சின் தன்மை அறிந்து நிதானமாக இன்னிங்ஸை கட்டமைத்தனர். ஆனால் இந்திய வீரர்கள் கடைசி வரை பிட்சின் தன்மையை உணரவில்லை. தென்ஆப்பிரிக்காவின் டேவிட் மில்லர் மற்றும் பிரேவிஸ் ஆகியோர் பிரமாதமாக ஆடினர். பந்து பேட்டிற்கு வருவதற்குச் சற்று தாமதமாவதை அவர்கள் உணர்ந்துகொண்டனர். அதனால் குறுக்கு ஷாட்கள் ஆடுவதை தவிர்த்து, நேராக விளையாடினார்கள். ஆனால் இந்திய பேட்ஸ்மேன்களோ ஆடுகளம் எப்படி இருக்கிறது என்பதைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல், எல்லா பந்துகளையும் தூக்கி அடித்து விக்கெட்டை பறிகொடுத்தார்கள். அதுதான் இந்திய அணி தோல்விக்கு முக்கிய காரணம். இவ்வாறு அவர் கூறினார்.
