- ஜிம்பாப்வே
- மேற்கிந்திய தீவுகள்
- வான்கடே
- மும்பை
- T20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்று
- வான்கேடே அரங்கம்
- ஷை ஹோப்
மும்பை: டி.20 உலக கோப்பை சூப்பர் 8 சுற்றில் இன்று இரவு 7 மணிக்கு வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டியில் குரூப் 1 பிரிவில் வெஸ்ட்இண்டீஸ் -ஜிம்பாப்வே மோதுகின்றன. வெ.இண்டீஸ் லீக் சுற்றில் 4 போட்டியிலும் வென்றுள்ளது. கேப்டன் ஷாய் ஹோப், பிராண்டன் கிங், ஹெட்மயர், பாவல், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட் என அதிரடி வீரர்கள் உள்ளனர். பவுலிங்கில் ஆல்ரவுண்டர்கள் ஹோல்டர், ஹாட்ரிக் விக்கெட் எடுத்துள்ள ஷெப்பர்ட், ஷமர் ஜோசப், சுழலில் ஹொசைன், குடேஷ்மோட்டி அசத்தலாம்.
மறுபுறம் ஜிம்பாப்வேயும் சூப்பர் பார்மில் உள்ளது. லீக்கில் வலுவான ஆஸ்திரேலியா, இலங்கையை வீழ்த்தியதால் கூடுதல் நம்பிக்கை உள்ளது. கேப்டன் சிக்கந்தர் ராசா அசத்தி வருகிறார். பிரையன் பென்னட் லீக்கில் ஆடிய 3 போட்டியில் (175 ரன்) அவுட் ஆனதில்லை. மருமணி, டியான் மியர்ஸ், ரியான் பர்ல்லும் பேட்டிங்கில் வலு சேர்க்கின்றனர். பவுலிங்கில் முசரபானி 9, பிராட் எவன்ஸ் 8 விக்கெட் எடுத்துள்ளனர். இரு அணிகளும் வெற்றியை தொடரும் முனைப்பில் உள்ளது. இதற்கு முன் டி.20 போட்டிகளில் 4 முறை மோதி உள்ளன. இதில் 3-1 என வெ.இண்டீஸ் முன்னிலையில் உள்ளது.
