பாலக்காடு: கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம் அருகே கைப்பரம்பு மற்றும் புணயூர்குளம் பஞ்சாயத்து கிராமங்களில் வனத்தில் இருந்து வெளியேறி விவசாயிகள் பயிரிட்டிருந்த வாழை, கிழங்கு, தென்னை, பாக்கு தோப்புகளில் புகுந்த காட்டு பன்றிகள் அட்டகாசம் செய்து வந்தது.
காட்டு பன்றிகளை சுட்டு கொல்ல வேண்டும் என விவசாயிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கொடுத்த புகாரின்பேரில் எர்ணாகுளத்திலிருந்து நேற்று வந்த வேட்டைக்காவலர்கள் இரண்டு பஞ்சாயத்துக்களில் சுற்றி திரிந்த 26 காட்டு பன்றிகளை சுட்டுக்கொன்றனர். தொடர்ந்து அவற்றின் மீது மண்ணெண்ணை ஊற்றி குழிதோண்டி புதைத்தனர். இதனால் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர்.
