×

எம்.டி., எம்.எஸ். சேர்க்கைக்கான தகுதியை நிர்ணயிப்பதல்ல நீட் பி.ஜி. கட் ஆஃப் மதிப்பெண்: உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு வாதம்

 

டெல்லி: எம்.டி., எம்.எஸ். சேர்க்கைக்கான தகுதியை நிர்ணயிப்பதல்ல நீட் பி.ஜி. கட் ஆஃப் மதிப்பெண் என்று உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு வாதம் செய்து வருகிறது. குறைந்த எண்ணிக்கையில் உள்ள MD, MS இடங்களை ஒதுக்கீடு செய்வதற்கான வடிகட்டும் ஏற்பாடே நீட் பி.ஜி. மருத்துவ மேற்படிப்புக்கான நீட் பி.ஜி கட்-ஆஃப் மதிப்பெண் குறைப்பை நியாயப்படுத்தி ஒன்றிய அரசு விநோத வாதம் செய்தது. எம்.டி., எம்.எஸ். படிப்புக்கான நீட் பி.ஜி. கட் ஆஃப் மதிப்பெண் குறைப்பால் மருத்துவர்களின் தகுதி பாதிக்காது . எம்.டி, எம்.எஸ். படிக்க விண்ணப்பித்தவர்கள் ஏற்கனவே எம்.பி.பி.எஸ். படித்தவர்கள் என்பதால், தகுதி பாதிக்காது. நீட் பி.ஜி கட் ஆஃப் குறைப்பை நியாயப்படுத்தி உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு வாதிட்டதால் கல்வியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Union government ,Supreme Court ,Delhi ,
× RELATED ராகுலின் தலைமையை ஏற்பவன் அல்ல!:...