டெல்லி: இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில் முதலிடம் பிடித்துள்ளது ஆப்பிள் ஐபோன். 2025 ஜனவரி முதல் டிசம்பர் வரை ரூ.2,08,743 கோடி மதிப்புள்ள ஐபோன்களை இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்துள்ளது ஆப்பிள். இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்த ஐபோன்களில் பெரும்பகுதி அமெரிக்காவுக்கே அனுப்பப்பட்டுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
ஐபோன் உள்பட இந்தியாவில் இருந்து கடந்த ஆண்டு ஜன. – டிச. வரை ரூ.2,73,454 கோடிக்கு ஸ்மார்ட் போன்கள் ஏற்றுமதி செய்துள்ளது. இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்பட்ட சுமார் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான ஐபோன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதில், அதிகளவில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகியுள்ளது. இதன்மூலம், இந்தியாவின் ஏற்றுமதி வரலாற்றில் முதல்முறையாக, ஆட்டோமோட்டிவ் டீசல் எரிபொருளைப் பின்னுக்குத் தள்ளி, ஸ்மார்ட்போன்கள் முதன்மையான ஏற்றுமதி துறையாக உருவெடுத்துள்ளன.
